மீண்டும் ஜென்டில்மேன் என நிருபித்த டிராவிட்

மீண்டும் ஜென்டில்மேன் என நிருபித்த டிராவிட்
மீண்டும் ஜென்டில்மேன் என நிருபித்த டிராவிட்

இளையோர்  உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசுத்தொகை வழங்கவேண்டும் தனக்கு மட்டும் ஏன் கூடுதல் தொகை என பிசிசிஐயிடம் டிராவிட் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

19வயதுக்குட்பட்டவர்களுக்காக  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைப்பெற்றது. இந்தப் போட்டி தொடங்கியதும் அனைவரின் கண்களும் இந்திய அணி பக்கம் இருந்தது. அதற்கு காரணம் ராகுல் டிராவிட் தான். இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் டிராவிட் தான் இளையோர் அணியின் பயிற்சியாளர். உலகக்கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்தே இந்திய வீரர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது.  காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை பந்தாடியது. இந்தப்போட்டியில் பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ஸ்கோரே 18 தான். இந்தப்போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றி பெற்றது.

அரையிறுதியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு, அவர்களின் உடை மாற்றும் அறைக்கே நேரில் சென்று டிராவிட் ஆறுதல் கூறினார்.  இந்தத்தகவலை டிராவிட்டே பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றிய பின்னரும் தன்னடக்கத்துடனே நடந்து கொண்டார். இந்த வெற்றிக்கு வீரர்களே முழுக்காரணம். அவர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது என்றார். இவர்களுக்கு உறுதுணையாக இருந்த உதவியாளர்களையும் பாராட்டுகிறேன் எனக்கூறினார்.

உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகையை அறிவித்தது. தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு தலா 20 லட்சம், அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு தலா 20 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பரிசுத்தொகையில் உள்ள வேறுபாட்டிற்கு டிராவிட் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐயிடம், தனக்கு மட்டும் ஏன் அதிகமாக பரிசுத்தொகை. இதர பயிற்சியாளர்களும் வெற்றிக்காக பாடுபட்டுள்ளனர். அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசுத்தொகை வழங்கவேண்டும் என தெரிவித்தாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com