இந்திய ’சுவரு’க்கு வயது 45: குவியும் வாழ்த்துகள்

இந்திய ’சுவரு’க்கு வயது 45: குவியும் வாழ்த்துகள்

இந்திய ’சுவரு’க்கு வயது 45: குவியும் வாழ்த்துகள்
Published on

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு இன்று 45 -வது பிறந்த நாள். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் ’சுவர்’ என்று வர்ணிக்கப்படுபவர், ராகுல் டிராவிட். தற்போது 19-வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் அவருக்கு இன்று 45 வயது பிறந்தநாள். அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். 

சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ‘கடமை என்றால் என்ன என்று எங்களுக்கு உணர்த்திய உங்களுக்கு வாழ்த்துகள். எனது முதல், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டியின் போது உங்களிடம் இருந்துதான் அணியின் தொப்பியை பெற்றேன். உங்களுக்கு எப்போதும் என்னிதயத்தில் சிறப்பு இடம் உண்டு’ என்று கூறியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதலில் வீரர், பிறகு பயிற்சியாளர், இப்போது ஆலோசகர் என ராஸ்தான் ராயல்ஸ்-க்கு உங்கள் பங்களிப்பு சிறப்பானது. உண்மையான ஜென்டில்மேன் நீங்கள்தான்’ என்று தெரிவித்துள்ளது.

முன்னாள் வீரர் விவிஎஸ்.லட்சுமண், ’நட்பு என்பது பிரிக்க முடியாதது என்பது மட்டுமல்ல, சந்திக்காமல் இருந்தாலும் மாறாமல் இருப்பது. அன்பு நண்பருக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம், ஷிகர் தவான், முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், முகமது கைப், ஹேமங் பதானி உட்பட பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com