யு-19, இந்தியா ஏ பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட்டை மாற்ற திட்டம்

யு-19, இந்தியா ஏ பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட்டை மாற்ற திட்டம்
யு-19, இந்தியா ஏ பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட்டை மாற்ற திட்டம்

இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட்டுக்கு தனி இடம் எப்போதும் உண்டு. இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று செல்லமாக அழைக்கப்படும் டிராவிட், ஓய்வுப்பெற்ற பிறகு 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் ஆனார். திறமைவாய்ந்த இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு ஏற்றுமதி செய்யும் தார்மீக பொறுப்பை டிராவிட் சிறப்பாக செய்து வருகிறார். இந்தியா ஏ அணிக்கும் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக டிராவிட் நியமிக்கப்பட்டதை அடுத்து இரட்டை ஆதாயப் பதவி பிரச்னையில் சிக்கினார். 

இந்நிலையில், ராகுல் டிராவிட் இனி இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்கமாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஐசிசி தகவலின்படி சிதான்ஷூ கோடக் மற்றும் பாரஸ் மாம்பரே ஆகியோர் முறையே இந்தியா ஏ மற்றும் யு19 அணிகளுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவுள்ளனர். அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே இவர்கள் அந்த பொறுப்பில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com