டிராவிட்டுக்கு ஹால் ஆஃப் பேம் வழங்கி ஐசிசி கவுரவம்

டிராவிட்டுக்கு ஹால் ஆஃப் பேம் வழங்கி ஐசிசி கவுரவம்

டிராவிட்டுக்கு ஹால் ஆஃப் பேம் வழங்கி ஐசிசி கவுரவம்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டுக்கு ஐ.சி.சி. "ஹால் ஆஃப் பேம்" கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை "ஹால் ஆஃப் பேம்" மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. டிராவிட் 1996 ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு இவர் ஆற்றிய பங்கு ஏராளம். இதுவரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 13,288 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,889 ரன்களை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவருக்கு கிரிக்கெட்டின் மிக உயரிய கவுரமான "ஹால் ஆஃப் பேம்" கிடைத்துள்ளது. இந்த பெருமையை பெரும் ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். 

இந்தாண்டு "ஹால் ஆஃப் பேம்" கவுரவம் ராகுல் டிராவிட், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை க்ளேர் டெய்லர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com