\
ரஹானே, இஷான் பொறுப்பான ஆட்டம்: இந்திய ஏ அணி வெற்றி!

ரஹானே, இஷான் பொறுப்பான ஆட்டம்: இந்திய ஏ அணி வெற்றி!

ரஹானே, இஷான் பொறுப்பான ஆட்டம்: இந்திய ஏ அணி வெற்றி!
Published on

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரஹானே, இஷான் கிஷான் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து லயன்ஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ரஹானே தலைமையிலான இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி, சாம் பில்லிங்ஸ் தலைமையிலான இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் களமிறங்கியது.

கேப்டன் பில்லிங்ஸின் சதத்தால் (108 ரன்) அந்த அணி, 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்தது. இந்திய ஏ அணி தரப்பில் சித்தார்த் கவுல், மார்க ண்டே, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணி, கேப்டன் ரஹானே (59 ரன்), விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் (57 ரன்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத் தில் 49.1 ஓவரில் 288 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இஷான் கிஷான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com