\
இருபதாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஃபேல் நடால்

இருபதாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஃபேல் நடால்

இருபதாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஃபேல் நடால்
Published on

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச்சை வீழ்த்தி தனது இருபதாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நடால்.

இதன் மூலம் இருபது கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார் நடால். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் ரேங்கிங்கில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச்சும், இரண்டாம் இடத்தில் உள்ள நடாலும் மோதினர். 

ஆரம்பம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய நடால் 6 - 0, 6 - 2, 7 - 5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி பதிமூன்றாவது முறையாக பிரெஞ்சு ஓபன் சாம்பியனாகி உள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com