ஆஸ்திரேலிய ஓபன் - இறுதிப் போட்டியில் நடால் - மெத்வதேவ் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் - இறுதிப் போட்டியில் நடால் - மெத்வதேவ் மோதல்
ஆஸ்திரேலிய ஓபன் - இறுதிப் போட்டியில் நடால் - மெத்வதேவ் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நடால் - மெத்வதேவ் மோத இருக்கின்றனர். 

அரை இறுதிப் போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த மேட்டியோ பெரட்டினியை எதிர்த்து நடால் விளையாடினார். இதில் முதல் இரண்டு செட்களை ஆறுக்கு மூன்று, ஆறுக்கு இரண்டு என எளிதாக வென்ற நடால் மூன்றாவது செட்டை மூன்றுக்கு ஆறு என்ற கணக்கில் இழந்தார். தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் நான்காவது செட்டை ஆறுக்கு மூன்று என வசப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ரஃபேல் நடால் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது ஆறாவது முறை. இறுதிப் போட்டியில் அவர் வெல்லும் பட்சத்தில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனை மகுடத்தை தன் வசமாக்குவார். தற்போது ஃபெடரர், நடால், ஜோக்கோவிச் ஆகியோர் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சம நிலையில் உள்ளனர். இந்நிலையில் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் வென்ற ரஷ்யாவின்  மெத்வதேவ், இறுதிப் போட்டியில் நடாலை எதிர்கொள்ள இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com