பிரஞ்ச் ஓபனில் மகுடம் சூடி நடால் சாதனை

பிரஞ்ச் ஓபனில் மகுடம் சூடி நடால் சாதனை

பிரஞ்ச் ஓபனில் மகுடம் சூடி நடால் சாதனை
Published on

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 11 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ரஃபேல் நடால் சாதனை படைத்தார்.

சர்வதேச டென்னிஸ் ரசிகர்களால் செம்மண் ஆடுகளத்தின் நாயகன் என போற்றப்படுபவர் ரஃபேல் நடால். 32 வயதாகும்  நடால் பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தைமை எதிர்த்து விளையாடினார். இந்தபோட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-4, 6-3, 6-2 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று கோப்பையை தன்வசப்படுத்தினார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 17 ஆவது பட்டத்தை வென்று நடால் சாதித்தார். மேலும் ஓரே கிராண்ட்ஸ்லாம் தொடரில் 11 பட்டங்களை வென்றுள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை மார்க்கிரேட் கோர்ட்டின் சாதனையை நடால் சமன் செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com