குயிண்டன் டி காக் அதிரடி: தென்னாப்ரிக்க அணி சாதனை வெற்றி

குயிண்டன் டி காக் அதிரடி: தென்னாப்ரிக்க அணி சாதனை வெற்றி

குயிண்டன் டி காக் அதிரடி: தென்னாப்ரிக்க அணி சாதனை வெற்றி


பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்ரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. 

கிம்பெர்லே நகரில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. 110 ரன்கள் எடுத்த முஷ்பிகுர் ரஹிம், தென்னாப்ரிக்காவுக்கு எதிராக சதம் விளாசிய முதல் பங்களாதேஷ் வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். 279 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணியில், தொடக்க வீரர்கள் ஆம்லா, குயிண்டன் டி காக் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். தென்னாப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 43ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் இழப்பின்றி எட்டப்பட்ட அதிகபட்ச இலக்காக இது அமைந்துள்ளது. டி காக் 168 ரன்களும், ஆம்லா 110 ரன்களும் எடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com