கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா: டிராவில் முடிந்த ஜெர்மனி-ஸ்பெயின் போட்டி

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா: டிராவில் முடிந்த ஜெர்மனி-ஸ்பெயின் போட்டி
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா: டிராவில் முடிந்த ஜெர்மனி-ஸ்பெயின்  போட்டி

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஜெர்மனி ஸ்பெயின் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.

ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கும் கத்தார் கால்பந்து போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் ;நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ஜப்பான் கோஸ்டாரிகா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் கோஸ்டாரிகா அணி வீரர் புல்லர் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன் மூலம் கோஸ்டாரிகா அணி 1:0 என்ற கோல் ஜப்பான் அணியை வென்றது.

இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில், மொராக்கோ பெல்ஜியல் அணியை எதிர்த்து விளையாடியது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை, இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் கோஸ்டாரிகா வீரர் சாய்ஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். ஆட்டத்தின் 90+2 வது நிமிடத்தில் கோஸ்டாரிகா வீரர் அபூக்லால் ஒரு கோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதிபடுத்தினார். இதன் மூலம் 2:0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா மொராக்கோ அணியை வென்றது.

இதையடுத்து இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் குரோஷியா கனடா அணிகள் களம் கண்டன. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் கனட வீரர் டேவிஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். இதையடுத்து ஆட்டத்தின் 36 மற்றும் 70-வது நிமிடங்களில் குரோஷியா வீரர் கிராமரிக் இரண்டு கோல்களை அடித்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் லிவாஜா, ஆட்டத்தின் 90+4-வது நிமிடத்தில் மேஜர் ஆகியோர் தலா ஒருகோல் அடித்த நிலையில், 4:1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி கனடா அணியை பந்தாடியது.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பலம்வாய்ந்த ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் மொராட்டா ஒருகோல் அடித்து தனது நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃபுல்கிருக் ஒருகோல் அடித்தார். இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், 1:1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com