\
கத்தார் உலகக் கோப்பை: இன்று நடைபெறவுள்ள 4 போட்டிகள்; ஜெர்மனிக்கு டஃப் கொடுக்குமா ஜப்பான்?

கத்தார் உலகக் கோப்பை: இன்று நடைபெறவுள்ள 4 போட்டிகள்; ஜெர்மனிக்கு டஃப் கொடுக்குமா ஜப்பான்?

கத்தார் உலகக் கோப்பை: இன்று நடைபெறவுள்ள 4 போட்டிகள்; ஜெர்மனிக்கு டஃப் கொடுக்குமா ஜப்பான்?
Published on

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளது.

கத்தாரில் கலர்ஃபுல்லாக தொடங்கி ரசிகர்களின் கண்களை கவர்ந்த கால்பந்து போட்டியில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் எப் பிரிவில் இடம் பெற்றுள்ள மொராக்கோ அணி, குரோஷியா அணியை எதிர் கொள்கிறது.

அதேபோல் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இரண்டாவது போட்டியில் ஈ பிரிவில் இடம் பெற்றுள்ள பலம்வாய்ந்த ஜெர்மனி அணி, ஜப்பான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் மூன்றாவது போட்டியில் ஈ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின், கோஸ்டாரிகா உடன் மோத உள்ளது.

நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் நான்காவது போட்டியில் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் அணி, கனடா அணியுடன் விளையாட உள்ளது. இன்று நடைபெற உள்ள இந்த நான்கு போட்டிகளும், மைதானத்தில் குவிந்துள்ள ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com