கத்தார் கால்பந்து திருவிழா: அடுத்த சுற்றில் ஜப்பான் - தொடரில் இருந்து வெளியேறிய ஜெர்மனி

கத்தார் கால்பந்து திருவிழா: அடுத்த சுற்றில் ஜப்பான் - தொடரில் இருந்து வெளியேறிய ஜெர்மனி
கத்தார் கால்பந்து திருவிழா: அடுத்த சுற்றில் ஜப்பான் - தொடரில் இருந்து வெளியேறிய ஜெர்மனி

கத்தார் கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் அணியை வென்ற ஜப்பான் அணி அடுத்த சுற்றுப் போட்டிக்கு முன்னேறியது, ஆனாhல் ஜெர்மனி தொடரில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முக்கியமான நான்கு போட்டிகள் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள குரோசியர் பெல்ஜியல் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில், ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், கோலின்றி ஆட்டம் டிராவில் முடிந்தது.

மற்றொரு போட்டியில் மொராக்கோ, கனடா அணியை எதிர்த்து விளையாடியது. இதில், ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் மொராக்கோ அணி வீரர் ஜியேச் ஒருகோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். இதையடுத்து ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் அதே அணி வீரர் என்-நெஸ்ய்ரி ஒருகோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கனட வீரர் ஹகார்ட் ஒருகோல் அடித்து தனது அணிக்கு ஆறுதல் அளித்தார். இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்காததால் 2:1 என்ற கோல் கணக்கில் மெராக்கோ அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணியை எதிர்த்து ஸ்பெயின் அணி களம்கண்டது. இதில், ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மொராட்டா ஒருகோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டோன் ஒருகோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 51-வது நிமிடத்தின் ஜப்பான் வீரர் தனகா ஒருகோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் ஜப்பான் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்று போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில் ஜெர்மனி கோஸ்டாரிகா அணியுடன் மோதியது. இதில், ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நாப்ரி ஒரு கோலும், ஆட்டத்தின் 73 மற்றும் 85-வது நிமிடத்தில் ஹேவர்ட்ஸ் இரண்டு கோல்களும், ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் ஃபுல்கிரக் ஒரு கோலும் அடித்தனர். கோஸ்டாரிகா அணி சார்பாக ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் டெயேடா ஒரு கோலும், 70-வது நிமிடத்தில் நியூயர் ஒரு கோலும் அடித்து தனது அணிக்கு ஆறுதல் அளித்தனர். இதன் மூலம் 4:2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றிபெற்ற போதும் புள்ளி பட்டியலில் குறைந்த புள்ளிகளை பெற்றதால் தொடரில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com