நெய்மர் வரவால் உற்சாகம்; கோல் மழை பொழிந்த பிரேசில்- காலிறுதிக்கு முன்னேறிய குரோசியா! #FIFA

நெய்மர் வரவால் உற்சாகம்; கோல் மழை பொழிந்த பிரேசில்- காலிறுதிக்கு முன்னேறிய குரோசியா! #FIFA
நெய்மர் வரவால் உற்சாகம்; கோல் மழை பொழிந்த பிரேசில்- காலிறுதிக்கு முன்னேறிய குரோசியா! #FIFA

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற குரோசியா, பிரேசில் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியது.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என உலக கால்பந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்துபடைத்து வரும் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் குரோசியா, ஜப்பான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியது.

டை பிரேக்கரில் கெத்துகாட்டிய குரேஷியா!

முதல்பாதி ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஜப்பான் அணி வீரர் மேடா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். இந்நிலையில், முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் ஜப்பான் அணி 1 கோல் அடித்து 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் குரோசியா வீரர் பெரிசிக் ஒருகோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் கடுமையாக மோதிக் கொண்டனர், ஜப்பான் அணி தனக்கு கிடைத்த பல கோல் வாய்ப்புகளை தவறவிட்டது.

இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி 1:1 என்ற கோல் கணக்கில் சமனின் முடிந்தது. இதையடுத்து டை பிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது. இதில், குரோசியா அணி 3:1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வென்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

தென்கொரியாவை ஊதிதள்ளிய பிரேசில்!

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் பலம்வாய்ந்த பிரேசில் அணி, தென் கெரியா அணியை எதிர்கொண்டது. இதில். காயத்தில் இருந்து மீண்ட நட்சத்திர வீரர் நெய்மர் மீண்டும் பங்கேற்றார். போட்டி மிகவும் கடுமையாக இருந்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில, அனுபவ வீரர்களைக் கொண்ட பிரேசில் அணி வரிசையாக 4 கோல்களை அடித்து ஜப்பான் அணியை பந்தாடியது.

முதல்பாதி ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ஜூனியர் ஒருகோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு கிடைத்த பெனல்டி சூட்-அவுட்டில் நட்சத்திர வீரர் நெய்மர் ஒருகோல் அடித்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் ரிச்சார்லிசன் ஒரு கோலும் 36-வது நிமிடத்தில் லூகஸ் ஒரு கோல் என கோல் மழை பொழிந்தனர்.

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் தென் கொரிய வீரர் பால்க் ஒருகோல் அடித்து தனது அணிக்கு ஆறுதல் அளித்தார். இறுதியில் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் மொராக்கோ, ஸ்பெயின் அணியுடன் களம் காண்கிறது. அதேபோல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com