கத்தார் கால்பந்து திருவிழா: அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்ற அர்ஜென்டினா பிரான்ஸ் அணிகள்

கத்தார் கால்பந்து திருவிழா: அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்ற அர்ஜென்டினா பிரான்ஸ் அணிகள்
கத்தார் கால்பந்து திருவிழா: அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்ற அர்ஜென்டினா பிரான்ஸ் அணிகள்

கத்தார் கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் காலியிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டிகளில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள டுனிசியா பிரான்ஸ் அணியுடனும், ஆஸ்திரேலியா டென்மார்க் அணியுடனும் பலப்பரீட்சை நடத்தியது.

இதில், கத்தாரில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் - டுனிசியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 58 ஆவது நிமிடத்தில் டுனிசிய வீரர் வகாபி காஸ்ரி ஒரு கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இதன் பின் இரு அணிகளும் கடுமையாக முயன்றும் கோல் எதுவும் அடிக்கவில்லை. எனவே 1 - 0 என்ற கோல் கணக்கில் டுனிசியா நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

2014 ஆம் ஆண்டு காலிறுதிக்குப் பிறகு உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் தற்போதுதான் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பிரான்ஸ் அடுத்த சுற்றிற்கு தகுதிபெற்றது. மற்றொரு போட்டியில் டென்மார்க் அணியை 0 - 1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றது.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைறெ;ற போட்டியில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள போலந்து அணி அர்ஜென்டினாவை சந்தித்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றத் தவறினார். இதையடுத்து நடைபெற்ற 2 ஆவது பாதி ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அலக்சிஸ் மேக் அலிஸ்டர் ஒருகோலும். ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரசு ஒரு கோலும் அடித்து தங்கள் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தனர். இதன் மூலம் 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற அர்ஜென்டினா அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது. இந்த போட்டியில் போலந்து அணி தோல்வியுற்ற போதும் கோல் வித்தியாச அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

லுசைலில் நடைபெற்ற மற்றொரு சி பிரிவு போட்டியில் சவுதி அரேபியாவும் மெக்சிகோ அணியும் களம்கண்டன. இதில், முதல்பாதி ஆட்டம் கோல் ஏதும் இன்றி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் மார்ட்டின் ஒரு கோலும், 52வது நிமிடத்தில் சாவிஜ் ஒரு கோலும் அடித்தனர். இதையடுத்து ஆட்டத்தின் 90+5 வது நிமிடத்தில் சவுதி அரேபிய வீரர் அல்-டவ்சாரி ஒருகோல் அடித்து ஆறுதல் அளித்தார். இதன் மூலம் 2 : 1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி பெற்றது. இருந்த போதிலும் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com