வெள்ளி வென்ற தங்க மங்கை சிந்து

வெள்ளி வென்ற தங்க மங்கை சிந்து

வெள்ளி வென்ற தங்க மங்கை சிந்து
Published on

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டு முறை வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்ற சாதனையை இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பெற்றுள்ளார். 

சீனாவின் நான்ஜிங் நகரில்  24–வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பி வி சிந்து மற்றும் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் ஆகியோர் மோதினர். முதல் செட்டில் கரோனினாவுக்கு ஈடுகொடுத்து ஆடிய போதும் 21-19 என கணக்கில் அதனை இழந்தார். இரண்டாவது செட் முழுவதும் கரோலினாவே ஆதிக்கம் செலுத்தினார்.

இதனால், கரோலினா மரின்  21-19, 21-10 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். கரோலினா மரின் முதல் வீராங்கனையாக மூன்றாவது முறை உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் பட்டம் வென்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் தோற்றாலும் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் பிவி சிந்து. இன்றைய போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிவி சிந்து. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com