சையது மோதி சர்வதேச பேட்மின்டன்: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து - பன்சோட் இன்று மோதல்

சையது மோதி சர்வதேச பேட்மின்டன்: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து - பன்சோட் இன்று மோதல்
சையது மோதி சர்வதேச பேட்மின்டன்: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து - பன்சோட் இன்று மோதல்

சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, இளம் நாயகியான மாளவிகா பன்சோட்டை எதிர்த்து விளையாடுகிறார்.

அரையிறுதியில் சிந்துவை எதிர்த்து விளையாடவிருந்த ஐந்தாம் நிலை வீராங்கனையான எவ்ஜெனியா கோஸட்க்யா காயம் காரணமாக பாதியில் விலகினார். இதையடுத்து சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் மாளவிகா பன்சோட், அனுபமா உபாத்தியாயாவை மூன்று செட்களில் போராடி தோற்கடித்தார்.

இந்த நிலையில், இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற வரலாற்று நாயகியான சிந்துவை இறுதிப்போட்டியில் இன்று எதிர்கொள்கிறார் மாளவிகா. நாக்பூரைச் சேர்ந்த 20 வயது வீராங்கனையான மாளவிகா பன்சோட் சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் இரண்டாமாண்டு பயின்று வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com