\
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து !

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து !

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து !
Published on: 

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா வீராங்கனை பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை பிவி சிந்து முன்னேறினார். இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜப்பான் நாட்டின் அகேன் யமகுச்சி எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை அகேன் யமகுச்சி இந்தியாவின் பிவி சிந்துவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். 

இதுவரை இவர்களில் இருவரும் 14 முறை மோதியுள்ளனர். இதில் பிவி சிந்து 10 முறையும் யமாகு 4 முறையும் வெற்றிப் பெற்றுள்ளனர். எனவே பிவி சிந்து இந்தப் போட்டியில் வெற்று பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் தோற்றார். இறுதி போட்டியில் தோற்றதன் மூலம் இந்தோனேஷியா பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com