ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பி.வி.சிந்து உள்ளிட்டோர் 2-வது சுற்றுக்கு தகுதி

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பி.வி.சிந்து உள்ளிட்டோர் 2-வது சுற்றுக்கு தகுதி
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பி.வி.சிந்து உள்ளிட்டோர் 2-வது சுற்றுக்கு தகுதி

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி பிலிப்பைன்ஸில் தொடங்கியுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, முதல் சுற்றில் சீனத் தைபேயின் பாய் யு போவை 18-21, 27-25, 21-9 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால், தென் கொரியாவின் சிம் யுஜினை 21-15, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், 22-20, 21-15 என்ற நேர் செட்களில் மலேசியாவின் டிசே யாங்கை தோற்கடித்தார்.

இதையும் படிக்க: மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட ஹர்ஷல் பட்டேல்- ரியான் பராக்; என்ன காரணம்? - வைரலாகும் வீடியோ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com