விளையாட்டு
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பி.வி.சிந்து
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பி.வி.சிந்து
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்றில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, 2-வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அயா ஓஹோரியை எதிர்கொண்டார்.
39 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் பி.வி.சிந்து, 21-14, 21-17 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் கால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து கால்இறுதி சுற்றில் ஜப்பானை சேர்ந்த யகனேவுடன் பி.வி.சிந்து மோதுகிறார்.