பத்ம பூஷண் விருதுக்கு பி.வி.சிந்து பெயர் பரிந்துரை
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் மற்றும் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டிற்கு பெருமை சேர்த்ததால், சிந்துவின் பெயரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. 22 வயதான பி.வி.சிந்து, ஏற்கனவே பத்ம ஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை பெற்றுள்ளார்.
பி.வி.சிந்து கடந்த ஆண்டு, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த மாதம் லண்டனில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். அதனைத் தொடர்ந்து நடந்த கொரிய ஓபனில் பட்டம் வென்று, தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். சாதனைகளை நிகழ்த்திய சிந்துவை பெருமைப்படுத்தும் வகையில், தற்போது பத்ம பூஷண் விருதுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் அவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதுக்கு, தோனியின் பெயரை பிசிசிஐ ஏற்கனவே பரிந்துரை செய்திருக்கிறது.