இறுதிப்போட்டியில் நுழைந்தார்  பி.வி.சிந்து

இறுதிப்போட்டியில் நுழைந்தார் பி.வி.சிந்து

இறுதிப்போட்டியில் நுழைந்தார் பி.வி.சிந்து
Published on

சீனாவில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனையை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள சிந்து, அரையிறுதியில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். முதல் செட்டை 21-16 என சிந்து கைப்பற்றினார். இரண்டாவது சுற்றில் ஜப்பான் வீராங்கனை கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் அந்த செட்டில் 12-19 என சிந்து பின்தங்கினார். எனினும் சமாளித்து விளையாடிய சிந்து, இரண்டாவது செட்டை 24-22 எனக் கைப்பற்றினார்.

இதன் மூலம் உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில், தொடர்ந்து இரண்டாவது முறையாக பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரின் உடன் சிந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளார். இவர்கள் இருவரும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் கரோலினா மரின் 6 முறையும், சிந்து 5 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை இறுதிப்போட்டியில் போராடித் தோல்வியடைந்த சிந்து, இம்முறை பட்டம் வென்று வரலாறு படைக்கும் முனைப்புடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com