ஆசிய விளையாட்டுப் போட்டி: ஃபைனலுக்கு தகுதி பெற்றார் சிந்து

ஆசிய விளையாட்டுப் போட்டி: ஃபைனலுக்கு தகுதி பெற்றார் சிந்து

ஆசிய விளையாட்டுப் போட்டி: ஃபைனலுக்கு தகுதி பெற்றார் சிந்து
Published on

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலம்பங் நகரங்களில் நடந்து வருகிறது. இங்கு நடந்த பேட்மின்டன் போட்டியில் மகளிர் அரையிறுதி பிரிவில் பிவி. சிந்து, ஜப்பானின் அகனே யமகுஜி (Akane Yamaguchi)யுடன் மோதினார். இந்த போட்டியில், 21-17,15-21, 21-10 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்றார். 65 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரங்கனை ஒருவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இதுதான் முதல் முறை. இறுதிப்போட்டியில், முதல் நிலை வீராங்கனையான டை சூ யிங்-கை அவர் சந்திக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com