வெறித்தனமான ஆதரவாளர்களின் படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த வார்னர்

வெறித்தனமான ஆதரவாளர்களின் படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த வார்னர்

வெறித்தனமான ஆதரவாளர்களின் படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த வார்னர்
Published on

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 2021 ஐபிஎல் சீசனின், ஐபிஎல் லீக் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் தனது அணியின் தீவிர ஆதரவாளர்களின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அந்த அணியின் கேப்டனும், அதிரடி தொடக்க வீரருமான டேவிட் வார்னர். 

அவர் பகிர்ந்துள்ள அந்த படத்தில் வார்னரின் மூன்று மகள்களும்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆரஞ்சு நிற ஜெர்சியில் காட்சி தருகின்றனர். “எங்களது முதல் ஆட்டத்திற்கு தயாராக இருப்பவர்கள் கைகளை உயர்த்துங்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து எனது நம்பர் 1 ஆதரவாளர்கள் அவர்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்” என வார்னர் அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். 

வார்னர், அப்துல் சமாத், அபிஷேக் ஷர்மா, பாசில் தம்பி, புவனேஸ்வர் குமார், ஜகதீஷ் சுஜித், ஜேசன் ஹோல்டர், பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், பிரியம் கார்க், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, ஷபாஸ் நதீம், ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, சித்தார்த் கவுல், கலீல் அகமது, நடராஜன், விஜய் ஷங்கர், விராட் சிங், ஸாஹா மாதிரியான வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். 

இதில் வார்னர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 5254 ரன்கள் குவித்து நான்காவது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com