விளையாட்டு குடும்பத்தில் இருந்து ஒரு கிரிக்கெட் வீரர்! சித்தார்த் கவுலின் பின்னணி!

விளையாட்டு குடும்பத்தில் இருந்து ஒரு கிரிக்கெட் வீரர்! சித்தார்த் கவுலின் பின்னணி!
விளையாட்டு குடும்பத்தில் இருந்து ஒரு கிரிக்கெட் வீரர்! சித்தார்த் கவுலின் பின்னணி!

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள சித்தார்த் கவுல், விளையாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் பசில் தம்பி, வாஷிங்டன் சுந்தர், சித்தார்த் கவுல், தீபக் ஹூடா தேர்வாகியுள்ளனர். நாளை நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல் களமிறங்குவார் என்று தெரிகிறது.

பஞ்சாப்பை சேர்ந்த கவுலின் அப்பா தேஜ், அம்மாநில முதல் தர கிரிக்கெட் வீரர். அம்மா, சந்தியா இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர். சகோதரர் உதய், பஞ்சாப் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர். 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கவுல், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். இதையடுத்து இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதுபற்றி கவுல் கூறும்போது, ’ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினேன். அப்போது ஆசிஷ் நெஹ்ரா, புவனேஷ்வர்குமார், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆகியோர் டிப்ஸ்களை வழங்கினர். அது எனக்கு உதவியாக இருந்தது. நெருக்கடியான காலகட்டங்களில் எப்படி பந்துவீச வேண்டும் என்பதை நெஹ்ராவும் புவனேஷ்வர்குமாரும் கூறியுள்ளனர். இந்திய ஏ அணியில் விளையாடிய போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறிய அட்வைஸும் எனக்கு உதவியது. தன்னம்பிக்கை முக்கியம் என்று அவர் கூறுவார். அதைதான் பின்பற்றுகிறேன்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com