பொறுமையாக ஆடிய வார்னர் - ஹைதராபாத் 150 ரன்கள் குவிப்பு
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 150 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் 22வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் 1 (6) ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் டேவிட் வார்னர் தனது அதிரடியை மாற்றி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கரும் பொறுமையாகவே ஆடினார்.
26 (27) ரன்களில் விஜய் சங்கர் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்த வந்த நபி 12 (7) ரன்களில் ரன் அவுட் ஆனார். விக்கெட்டை இழக்காமல் ஆடிய வார்னர் இறுதிவரையில் பொறுமையாகவே ஆடி 62 பந்துகளில் 70 ரன்கள் மட்டும் எடுத்தார். இறுதி நேரத்தில் களமிறங்கிய ஹூடா 3 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. பஞ்சாப் அணியில் அஸ்வின் ஒரு விக்கெட் மற்றும் ரன் அவுட்டை எடுத்தார்.