\
டூ பிளசிஸ், ரெய்னா அதிரடி : பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு

டூ பிளசிஸ், ரெய்னா அதிரடி : பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு

டூ பிளசிஸ், ரெய்னா அதிரடி : பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு
Published on

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 170 ரன்கள் குவித்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னையின் தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் 7 (11) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினார். 

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டூ பிளசிஸ் மற்றும் ரெய்னா அதிரடியாக ரன்களை உயர்த்தினர். இருவருமே அரை சதம் அடித்து பஞ்சாப் பந்துவீச்சை சிதறிடித்தனர். 53 (38) ரன்கள் எடுத்த நிலையில் ரெய்னா அவுட் ஆனார். தொடர்ந்து விளையாடிய டூ பிளசிஸ் 55 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தபோது, விக்கெட்டை இழந்து சதத்தை தவறவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 170 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் சாம் குரன் 3 விக்கெட்டுகளையும், ஷமி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com