விளையாட்டு
டாஸ் வென்றது பெங்களூர் அணி : பஞ்சாப் அணியில் நீஷம் சேர்ப்பு
டாஸ் வென்றது பெங்களூர் அணி : பஞ்சாப் அணியில் நீஷம் சேர்ப்பு
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்றது.
ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பந்துவீசவுள்ளது.
முதல் போட்டியில் பெற்ற வெற்றி தொடர வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூர் அணியும், முதல் போட்டியில் தோற்றதால் இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பஞ்சாப் அணியும் களமிறங்கவுள்ளது. பஞ்சாப் அணியில் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் இடம்பெற்றுள்ளார்.