சிக்ஸர்கள் விளாசி கே.எல்.ராகுல் அதிரடி சதம் : பஞ்சாப் 206 ரன்கள் குவிப்பு
பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 6வது போட்டி பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 26 (20) ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் போல்ட் ஆனார். அவரைத்தொடர்ந்து வந்த நிகோலஸ் பூரான் 17 (18) ரன்களில் வெளியேறினார்.
பின்னர் வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். இதற்கிடையே அதிரடியாக விளையாடி கே.எல்.ராகுல் சதம் அடித்தார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத கே.எல்.ராகுல் 132 (69) ரன்களை விளாசினார். பெங்களூர் அணியில் சிறப்பாக பந்துவீசிய துபே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.