\
ராஜஸ்தான் பந்து வீச்சை பஞ்சு பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் : மேட்ச் அப்டேட்

ராஜஸ்தான் பந்து வீச்சை பஞ்சு பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் : மேட்ச் அப்டேட்

ராஜஸ்தான் பந்து வீச்சை பஞ்சு பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் : மேட்ச் அப்டேட்
Published on

ஷார்ஜாவில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் விளையாடி வருகின்றன. இருபது ஓவர் முடிவில் 223 ரன்களை குவித்துள்ளது பஞ்சாப்.

பஞ்சாப் அணியின் ஓப்பனர்கள் கேப்டன் கே.எல் ராகுலும், மயங் அகர்வாலும் அதிரடியாக விளையாடி அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர்.

குட் லெந்த், பேட் லெந்த் என எந்த வஞ்சனையும் பார்க்காமல் ராஜஸ்தான் பந்து வீச்சை பஞ்சு பஞ்சாய் பறக்கவிட்டனர் இருவரும்.

முதல் விக்கெட்டிற்கு 183 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். மயங் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களை குவித்து அவுட்டானார்.  தன் பங்கிற்கு 69 ரன்களை அடித்து அவுட்டானார் கே.எல் ராகுல்.
பலமான பவுலிங் படையோடு களம் இறங்கிய ராஜஸ்தானுக்கு இந்த ஆட்டத்தில் ஏமாற்றமே எஞ்சியது. 
ராஜஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com