பஞ்சாபை 'சுட்டெரிக்குமா' சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்? இன்று காத்திருக்கும் பரபரப்பான போட்டி

பஞ்சாபை 'சுட்டெரிக்குமா' சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்? இன்று காத்திருக்கும் பரபரப்பான போட்டி
பஞ்சாபை 'சுட்டெரிக்குமா' சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்? இன்று காத்திருக்கும் பரபரப்பான போட்டி

இரு அணிகளும் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் ஐந்தாம் இடத்திலும்,  ஹைதராபாத் 7-வது இடத்திலும் உள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும்  28வது லீக்  ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணிகள் மோதுகின்றன. இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைக்காத சமபலம் வாய்ந்த அணிகள்.

பஞ்சாப் கிங்ஸ் அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர். முந்தைய 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டிய மயங்க் அகர்வால் கடந்த ஆட்டத்தில் அசத்தி ஃபார்முக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலம். பேட்டிங்கில் லியாம் லிவிங்ஸ்டன் நம்பிக்கை அளிக்கிறார். ஜானி பேர்ஸ்டோ இன்று சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ரபடா, வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பந்துவீச்சும் மிரட்டலாகவே உள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் கட்டுக்கோப்புடன் பந்துவீசுவது அவசியம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியும் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை சாய்த்தது. முந்தைய 2 ஆட்டங்களில் நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் ஆகியோர் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தாலும், மிடில் ஆர்டரில் கலக்கிய ராகுல் திரிபாதி (71 ரன்கள்), மார்க் ராம் ( 68 ரன்கள் நாட்-அவுட்) ஆகியோர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். டி.நடராஜன், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜேன்சன், உம்ரான் மாலிக் என ஹைதராபாத்தின் பவுலிங் அசுர பலத்தில் உள்ளது.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 1 அபிஷேக் சர்மா, 2 கேன் வில்லியம்சன் (கேப்டன்), 3 ராகுல் திரிபாதி, 4 ஐடன் மார்க்ரம், 5 நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), 6 ஷஷாங்க் சிங், 7 மார்கோ ஜான்சன், 8 ஜே. சுசித், 9 புவனேஷ்வர் குமார், 10 உம்ரான் மாலிக், 11 டி நடராஜன்

பஞ்சாப் கிங்ஸ்: 1 மயங்க் அகர்வால் (கேப்டன்), 2 ஷிகர் தவான், 3 ஜானி பேர்ஸ்டோ, 4 லியாம் லிவிங்ஸ்டோன், 5 ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), 6 ஷாருக் கான், 7 ஒடியன் ஸ்மித், 8 ககிசோ ரபாடா, 9 ராகுல் சாஹர், 10 வைபவ் அரோரா, 10 வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்

இதையும் படிக்க: ஐபிஎல்: மண்ணை கவ்விய டெல்லி; அசத்தலாக வெற்றிப்பெற்ற ஆர்சிபி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com