\
கேப்டனாக விராத் கோலியின் முதல் போட்டி... இந்திய அணிக்கு 351 ரன்கள் வெற்றி இலக்கு

கேப்டனாக விராத் கோலியின் முதல் போட்டி... இந்திய அணிக்கு 351 ரன்கள் வெற்றி இலக்கு

கேப்டனாக விராத் கோலியின் முதல் போட்டி... இந்திய அணிக்கு 351 ரன்கள் வெற்றி இலக்கு
Published on

இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது.

புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அந்த அணியில் ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். அதிகபட்சமாக ஜோ ரூட் 78 ரன்கள் குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 350 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி விராத் கோலி தலைமையில் விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com