விளையாட்டு
சூதாட்டத்தில் ஈடுபட்ட பாக். வீரருக்கு 5 ஆண்டுகள் தடை
சூதாட்டத்தில் ஈடுபட்ட பாக். வீரருக்கு 5 ஆண்டுகள் தடை
ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் சார்ஜில் கானுக்கு ஐந்தாண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் சார்ஜில் கான் தொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு தீர்ப்பாயம். இதில், சார்ஜில் கானுக்கு ஐந்தாண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டியின்போது சார்ஜில் கான் சூதாட்ட புகாரில் சிக்கினார். 28 வயதாகும் சார்ஜில் கான் சர்வதேச அளவில் 25 ஒருநாள் போட்டிகளிலும், 25 டிவெண்டி டிவெண்டி போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.