IPL-ஐ விட PSL-க்கு தான் டிஜிட்டல் வியூவர்ஸ் அதிகம்!-புள்ளி விவரம் சொன்ன பாக்.வாரிய தலைவர்

IPL-ஐ விட PSL-க்கு தான் டிஜிட்டல் வியூவர்ஸ் அதிகம்!-புள்ளி விவரம் சொன்ன பாக்.வாரிய தலைவர்
IPL-ஐ விட PSL-க்கு தான் டிஜிட்டல் வியூவர்ஸ் அதிகம்!-புள்ளி விவரம் சொன்ன பாக்.வாரிய தலைவர்

இந்தியாவின் ஐபிஎல் தொடரை விட பாகிஸ்தானின் பிஎஸ்எல் தொடர், தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே விஞ்சிவிட்டதாக கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் நஜாம் சேத்தி.

பாகிஸ்தான் நாட்டின் டி20 கிரிக்கெட் தொடரான பிஎஸ்எல் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 18ஆம் தேதியான சனிக்கிழமை அன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக இறுதி ஓவரின் இறுதி பந்துவரை சென்ற அந்த சுவாரசியம் மிகுந்த போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தி த்ரில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.

முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஷாஹின் அப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கி விளையாடியது முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி. ரிஸ்வான், ரீல் ரோஸோவ், கிரன் பொல்லார்ட், டிம் டேவிட் என அதிரடி வீரர்கள் நிரம்பிய முல்தான் சுல்தான் அணியே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 ரன்கள் வித்தியாசத்தில் விறுவிறுப்பான இறுதிகட்டத்தில் கோப்பையை தட்டிச்சென்றது லாக்கூர் கலந்தர்ஸ் அணி.

இந்நிலையில், பிஎஸ்எல் தொடர் குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் நஜாம் சேத்தி, ” தொடரை பார்க்க வரும் மக்கள் கூட்டம் மற்றும் டிக்கெட் விற்பனை குறித்தெல்லாம் விட்டுவிடுங்கள். டிஜிட்டல் பார்வையாளர்களை பற்றி மட்டும் பேசலாம். ஐபிஎல்லை விட பிஎஸ்எல் தொடங்கி பாதிதூரம் தான் வந்துள்ளது. ஆனால், தற்போது பிஎஸ்எல்லிற்கு கிடைத்திருக்கும் ரீச் என்பது அதிகமாக உள்ளது. பிஎஸ்எல் போட்டி தொடங்கும் போதே 11ஆக உள்ளது, அதுபோக போக 18லிருந்து 20 புள்ளிகளை தாண்டிவிடுகிறது.

அதாவது இந்த பிஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டியை மட்டும் 150 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிஜிட்டல் வழியாக பார்த்துள்ளனர். இது மிகச்சிறிய விஷயம் அல்ல. ஐபிஎல்லின் டிஜிட்டல் மதிப்பீடு 130 மில்லியனாக தான் இருக்கும் நிலையில், பிஎஸ்எல் 150 மில்லியனுக்கும் அதிகமாக வியூவர்ஸ்களை பெற்றுள்ளது. எனவே இது பாகிஸ்தானுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக்கோப்பை அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், 2023ஆம் ஆண்டின் ஆசிய கோப்பைத்தொடர் செப்டம்பரில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் நடத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த ஆசியகோப்பை தொடர், தற்போது பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியின் நிர்வாகமும் பாகிஸ்தானில் தொடர் நடத்தப்பட்டால், இந்தியா அதில் பங்கேற்காது என்று கூறியது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நாஜம் சேத்தி, இந்தியா ஆசியகோப்பை விளையாட பாகிஸ்தான் வராது என்றால், பாகிஸ்தானும் உலகக்கோப்பையில் விளையாட இந்தியா வராது என்று தெரிவித்திருந்தார். ஆசியகோப்பை விவகாரம் முற்றியுள்ள நிலையில் தற்போது ஐபிஎல்லையும் அட்டாக் செய்து பேசியுள்ளார் பிசிபி தலைவர் நாஜம் சேத்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com