\
பஜ்ரங் புனியா
பஜ்ரங் புனியாpt web

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பஜ்ரங் புனியா பங்கேற்பதில் சிக்கல்..!

தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையின் நடவடிக்கை காரணமாக, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Published on

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இம்மாத இறுதியில், துருக்கியில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க இருந்தார். இதன்மூலம், பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்றுவிடலாம் என பஜ்ரங் புனியா இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், அவரை காலவரையின்றி இடைநீக்கம் செய்து, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மார்ச் 10 ஆம் தேதியன்று, சோனேபட் பகுதியில் நடைபெற்ற தேர்வின்போது, சிறுநீர் மாதிரியை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதை பஜ்ரங் புனியா செய்யாத காரணத்தால், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில், செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க, பஜ்ரங் புனியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மீதான இந்த நடவடிக்கையால், பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com