இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது பாட்னா.. மகுடம் சூடப்போவது யார்?

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது பாட்னா.. மகுடம் சூடப்போவது யார்?
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது பாட்னா.. மகுடம் சூடப்போவது யார்?

புரோ கபடி லீக் தொடரில், நடப்புச் சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

5வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. சென்னையில் நேற்று நடைபெற்ற 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவை சேர்ந்த பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து பாட்னா அணி விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. விறுவிறுப்பு நிறைந்த போட்டியின் முடிவில் 47-44 என மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் பாட்னா அணி வெற்றி பெற்றது. பாட்னா அணியில் பர்தீப் நர்வால் 23 புள்ளிகளும், பெங்கால் வாரியர்ஸ் அணியில் மனிந்தர் சிங் 17 புள்ளிகளும் எடுத்தனர். பர்தீப் நர்வல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் புரோ கபடி லீக் தொடரில் 600 புள்ளிகளுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பை பர்தீப் நர்வால் பெற்றார். சென்னையில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து பாட்னா அணி விளையாடுகிறது.

முதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குஜராத் அணி நடப்பாண்டில் தான் புரோ கபடி லீக் தொடரில் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. மீண்டும் பாட்னா மகுடம் சூடுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர். குஜராத்க்கு முதல் தொடர் என்றாலும் லீக், நாக் அவுட் என அனைத்து சுற்று போட்டிகளிலும் மற்ற அணிகளை வீழ்த்தி முதலாவதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எனவே குஜராத்தை அவ்வளவு எளிதாக பாட்னா வீழ்த்த முடியாது. சாம்பியனாக தொடர பாட்னா களத்தில் கடுமையாக உழைக்க வேண்டும். முதல் தொடரில் மகுடம் சூட வேண்டும் என்ற முனைப்பில் குஜராத் உள்ளது. இதனால் சென்னையில் நடைபெறும் இறுதி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com