விளையாட்டு
புரோ கபடி: பிளே ஆஃப் சுற்று போட்டி இன்று தொடக்கம்
புரோ கபடி: பிளே ஆஃப் சுற்று போட்டி இன்று தொடக்கம்
புரோ கபடி லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. மும்பையில் இரவு 8:00 மணிக்கு நடைபெறும் முதல் எலிமினேட்டர் போட்டியில் புனேரி பல்டன் மற்றும் உத்தரபிரதேஷ் யோதா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் பாட்னா அணியை எதிர்த்து ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி விளையாடுகிறது. இந்தப் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்கும் அணிகள் தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணிகள் மூன்றாவது எலிமினேட்டர் போட்டியில் விளையாடவுள்ளன.