\
சென்னையில் இன்று புரோ கபடி இறுதிப் போட்டி

சென்னையில் இன்று புரோ கபடி இறுதிப் போட்டி

சென்னையில் இன்று புரோ கபடி இறுதிப் போட்டி
Published on: 

ஐந்தாவது புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை நேரு விளையாட்டரங்கில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

அறிமுக அணியாக நடப்புத் தொடரில் களமிறங்கிய குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் , லீக் சுற்றில் 15 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்திருந்தது. பிளே ஆப் சுற்றில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. லீக் சுற்றில் பாட்னா அணியை இருமுறை வீழ்த்திய உற்சாகத்தில் குஜராத் அணி களம் காண்கிறது. லீக்கில் குஜராத்திடம் அடைந்த தோல்விக்கு இறுதி ஆட்டத்தில் பதிலடி கொடுத்து ஹாட்ரிக் சாம்பியனாகும் முனைப்பில் பாட்னா அணி களமிறங்குகிறது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 3 கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com