\
புரோ கபடி: லீக் சுற்றுப் போட்டிகள் இன்று நிறைவு

புரோ கபடி: லீக் சுற்றுப் போட்டிகள் இன்று நிறைவு

புரோ கபடி: லீக் சுற்றுப் போட்டிகள் இன்று நிறைவு
Published on: 

ஐந்தாவது புரோ கபடி தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகின்றன.

ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களில் உள்ள குஜராத் மற்றும் புனே அணிகள் கடைசி லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. புனே அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், முதலிடத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்யும். 
புனேவில் இரவு 8 மணிக்குத் தொடங்கும் மற்றொரு போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துள்ள பெங்கால் வாரியர்ஸ் அணி, பி பிரிவில் 74 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்குகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com