விளையாட்டு
நாளை தொடங்குகிறது புரோ கபடி லீக் - வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்?
நாளை தொடங்குகிறது புரோ கபடி லீக் - வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்?
புரோ கபடி லீக் தொடருக்கான கேப்டன்கள் மற்றும் கோப்பை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 12 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர். நடப்புச் சாம்பியனான பாட்னா அணியின் கேப்டன் பர்தீப் நர்வால் , கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மும்பை அணியின் துணைக் கேப்டனும், தமிழக வீரருமான சேரலாதன், தமிழ் தலைவாஸ் அணியில் இடம் கிடைக்காதது வருத்தம் அளித்ததாகக் கூறினார். ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் சென்னையில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.