சொந்த மண்ணில் 4வது தோல்வியை சந்தித்தது தமிழ் தலைவாஸ்

சொந்த மண்ணில் 4வது தோல்வியை சந்தித்தது தமிழ் தலைவாஸ்

சொந்த மண்ணில் 4வது தோல்வியை சந்தித்தது தமிழ் தலைவாஸ்
Published on

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்துள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 58க்கு 37 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது. நடப்பு தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின்‌ மோசமான தோல்வியாக இது அமைந்ததது. லீக் சுற்றில் 11வது தோல்வியை சந்தித்துள்ள தமிழ் தலைவாஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது. இன்று நடைபெறும் போட்டியில் உத்தரப் பிரதேஷ் யோதா அணியுடன் தமிழ்‌ தலைவாஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

ஏற்கனவே தமிழ் தலைவாஸ் அணி, சென்னையில் விளையாடிய யுனைட்டட் மும்பை, ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், பூனேரி பால்டன் ஆகிய அணிகளுடனான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் தமிழக கபடி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com