புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
புரோ கபடி லீக் தொடரில், டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. முதல் பாதியில் 18 -15 என்ற கணக்கில், தமிழ்தலைவாஸ் அணி முன்னிலை வகித்தது. பிற்பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய பெங்கால் அணி 27-24 என்ற புள்ளிகள் கணக்கில் கடைசி நேரத்தில் முன்னிலை பெற்றது. கடைசி 5 வினாடிகள் இருந்தபோது தமிழ் தலைவாஸ் அணி, ஒரு புள்ளி பின்தங்கியிருந்தது. கடைசியாக தமிழ்தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் 2 புள்ளிகள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். ஒரு புள்ளி வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் போராடி வென்றது.