விளையாட்டு
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ், உ.பி. யோதா இன்று பலப்பரீட்சை
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ், உ.பி. யோதா இன்று பலப்பரீட்சை
புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் உத்தரபிரதேஷ் யோதா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புரோ கபடி லீக் தொடரில் சோனிபட்டில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் உத்தரபிரதேஷ் யோதா அணிகள் மோதுகின்றன. இதுவரை 9 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி, ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சியுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி தமிழ் தலைவாஸ் அணிக்கு உள்ளது. உத்தரபிரதேஷ் யோதா அணி 13 போட்டிகளில் விளையாடி, நான்கில் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் புனே அணியை எதிர்த்து ஹரியானா அணி களமிறங்குகிறது.