\
புரோ கபடி லீக் போட்டியில் ‘தமிழ் தலைவாஸ்’ மீண்டும் தோல்வி

புரோ கபடி லீக் போட்டியில் ‘தமிழ் தலைவாஸ்’ மீண்டும் தோல்வி

புரோ கபடி லீக் போட்டியில் ‘தமிழ் தலைவாஸ்’ மீண்டும் தோல்வி
Published on

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. 

பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில்,‘தமிழ் தலைவாஸ்’, ‘பெங்களூரு புல்ஸ்’ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 33க்கு 27 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பவன் குமார் 17 புள்ளிகள் எடுத்து அசத்தினார். 

முன்னதாக நடைபெற்ற மற்றொரு போட்டியில், யு.பி.யோத்தா 32க்கு 29 என்ற புள்ளிகள் கணக்கில், ‘பெங்கால் வாரியர்’ஸை வீழ்த்தியது. புள்ளிகள் பட்டியலில், ‘தபாங் டெல்லி’ 49 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ‘தமிழ் தலைவாஸ்’ 26 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com