”இது என் நீண்டநாள் கனவு” ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவுக்கு தேர்வான தமிழக வீரர்!

அடுத்த மாதம் பாரிஸில் நடைப்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டில் பங்கேற்க துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் short gun பிரிவுக்கு தகுதி பெற்று இருக்கிறார்.
பிரித்வி ராஜ் தொண்டைமான்
பிரித்வி ராஜ் தொண்டைமான்புதிய தலைமுறை

அடுத்த மாதம் பாரிஸில் நடைப்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டில் பங்கேற்க இருக்கும் வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டியில் short gun பிரிவுக்கு தகுதி பெற்று இருக்கிறார்.

இது குறித்து அவர் நம்மிடையே பேசும்பொழுது, “இது எனது நீண்டநாள் கனவு. கடந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள நினைத்தேன். கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்தேன். அதன் பிறகு 4 வருடமாக கடுமையாக பயிற்சி எடுத்து இந்த முறை தேர்வு பெற்று இருக்கிறேன். கண்டிப்பாக பரிசு பெறுவேன். ” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com