பிரித்வி ஷா மீண்டும் அபாரம்... 165 ரன்கள் விளாசி அசத்தல்!

பிரித்வி ஷா மீண்டும் அபாரம்... 165 ரன்கள் விளாசி அசத்தல்!

பிரித்வி ஷா மீண்டும் அபாரம்... 165 ரன்கள் விளாசி அசத்தல்!
Published on

விஜய் ஹசாரே கோப்பையில் இன்று நடைபெற்று வரும் கர்நாடக அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் பிரித்வி ஷா 122 பந்துகளில் 165 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.

விஜய் ஹசாரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடகா மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கர்நாடக அணி பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதிரடியாக விளையாடிய மும்பை அணியின் கேப்டன் பிரித்வி ஷா 122 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தார். அதில் 17 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும்.

இதில் மும்பை அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 322 ரன்கள் எடுத்தது. இந்தத் தொடரில் பிரித்வி ஷா தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இதே தொடரின் காலிறுதிப் போட்டியில் சவுராஷ்ட்ரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 185 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பிரித்வி ஷாவின் ஆட்டத்தை பார்த்து முன்னாள் வீரர் இர்பான் பதான் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com