இங்கிலாந்தில் அசத்திய ஏ அணி: பிருத்வி ஷா, இஷான், ஸ்ரேயாஸ் மிரட்டல்!

இங்கிலாந்தில் அசத்திய ஏ அணி: பிருத்வி ஷா, இஷான், ஸ்ரேயாஸ் மிரட்டல்!

இங்கிலாந்தில் அசத்திய ஏ அணி: பிருத்வி ஷா, இஷான், ஸ்ரேயாஸ் மிரட்டல்!
Published on

இங்கிலாந்து போர்டு லெவன் அணியுடனான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. 

இந்திய ஏ அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இங்கிலாந்தில் போர்டு லெவன் அணிக்கும் இந்திய ஏ அணிக்குமான முதல் ஒரு நாள் போட்டி, லீட்ஸில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற போர்டு லெவன் அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய் தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக் காரர் பிருத்வி ஷா 61 பந்தில் 70 ரன்களும் கேப்டன் ஸ்ரேயேஸ் ஐயர் 45 பந்தில் 54 ரன்களும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 46 பந்தில் 50 ரன்களும் குணால் பாண்ட்யா 34 ரன்களும் எடுத்தனர்.

(இஷான் கிஷான்)

பின்னர் இறங்கிய இங்கிலாந்து போர்டு லெவன் அணி, 36.5 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகப்பட்சமாக மாட் கிறிட்ச்லே 40 ரன்கள் எடுத்தார். 

இந்திய தரப்பில் தீபக் சாஹர் (சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியவர்) 7.5 ஓவர்களில் 3 விக்கெட்டை சாய்த்தார். அக்சர் படேல் 2 விக்கெட்டையும் பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, விஜய் சங்கர், குணால் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com