‘அக்டோபரில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடக்குமா?’ - பிசிசிஐ பொருளாளர்  பேட்டி 

‘அக்டோபரில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடக்குமா?’ - பிசிசிஐ பொருளாளர்  பேட்டி 
‘அக்டோபரில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடக்குமா?’ - பிசிசிஐ பொருளாளர்  பேட்டி 
உலக டி 20 போட்டிகள் அக்டோபர் அல்லது நவம்பரில் நடக்குமா என்பது பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் பேட்டி அளித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 15ஆம் தேதி அன்றும் நடைபெறுமா ? என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். இந்தியாவின் கொரோனா பாதிப்பு வேகத்தைப் பார்க்கும்போது, கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என்றே தோன்றுகிறது.
 
 
இதனிடையே  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் இந்த ஆண்டு ஐபிஎல் நடத்துவது குறித்து நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மிக விரிவான விளக்கத்தை அளித்திருந்தார். இது பற்றி  கங்குலி,“ “நீங்கள் எங்கிருந்து வீரர்களை வர வைப்பீர்கள்? வீரர்கள் எப்படி பயணம் செய்வார்கள்? இந்த நேரம், உலகில் உள்ள எந்தவொரு விளையாட்டிற்கும் சாதகமாக இல்லை. ஐபிஎல்லை மறந்துவிடுங்கள்”என்று கூறினார். அதனைத் தொடர்ந்து "நாளை மற்ற பி.சி.சி.ஐ பொறுப்பாளர்களுடன் ஆலோசித்த பிறகுதான் நான் இதைப் பற்றிக் கூற முடியும்” எனக் கூறியிருந்தார். 
 
 
இந்நிலையில், அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஏதேனும் ஒன்றை ஐ.சி.சி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளுக்காகத் தேர்வு செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பி.சி.சி.ஐ  பொருளாளர் அருண் துமல் கருத்து தெரிவித்துள்ளார்.  அருண் இது குறித்துப் பேசும் போது, “இப்போது, எதிர்காலம் குறித்த காட்சி மிகவும் மங்கலாக உள்ளது. ஊரடங்கு  எப்போது முடிவடையும் என்பது எங்களுக்குத் தெரியாது. அது பற்றி எங்களுக்குத் தெரியாதபோது, ஒரு அர்த்தமுள்ள விவாதத்தை  நாம் எப்படி செய்ய முடியும்?  நாங்கள் அரசாங்கத்திடமிருந்து ஒரு தெளிவான முடிவைப் பெற்றவுடன், நாங்கள் உட்கார்ந்து நிலைமையைப் பற்றி ஆராய்வோம். எதிர்காலத்தைப் பற்றிய எதையும் முன்கூட்டியே சொல்வது ஊகமாகிவிடும்”என ஒரு  பேட்டியின் போது பி.டி.ஐ யிடம்  துமல் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com