\
'தங்கப் பதக்கத்தை சுஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன்' செஸ் வீரர் பிரக்ஞானந்தா

'தங்கப் பதக்கத்தை சுஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன்' செஸ் வீரர் பிரக்ஞானந்தா

'தங்கப் பதக்கத்தை சுஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன்' செஸ் வீரர் பிரக்ஞானந்தா
Published on

உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் வென்ற தங்கப்பதக்கத்தை ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்திற்கு அர்பணிப்பதாக இளம் வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்தார். 

18 வயதுக்குட்பட்டோருக்கான உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். இதற்கான பாராட்டு விழா சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் பேசிய பிரக்ஞானந்தா, நான் வென்ற தங்கப்பதக்கத்தை சுஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன், இனி இதுபோல யாருக்கும் நடக்க கூடாது என்று வேதனை தெரவித்தார்.

மேலும் "என்னுடைய சிறப்பான போட்டியை வெளிப்படுத்தினேன். இது எனக்கு இன்னும் உத்வேகம் கிடைத்துள்ளது. தொடர்ந்து பல போட்டியில் பங்கேற்க பள்ளி எனக்கு உதவியாக இருக்கிறது பள்ளிகளில் செஸ் போட்டியில் மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். இன்னும் பல போட்டியில் பங்கேற்க கவனம் செலுத்த இருக்கிறேன்" என்றார் பிரக்ஞானந்தா.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com