5 விக்கெட்டுகள் சாய்த்தார் பிரதீப்: 500-ஐ தாண்டியது இந்திய அணி

5 விக்கெட்டுகள் சாய்த்தார் பிரதீப்: 500-ஐ தாண்டியது இந்திய அணி

5 விக்கெட்டுகள் சாய்த்தார் பிரதீப்: 500-ஐ தாண்டியது இந்திய அணி
Published on

இந்திய கிரிக்கெட் அணி, மதியம் ஒரு மணி நேர நிலவரப்படி 517 ரன்களை குவித்துள்ளது. இலங்கை தரப்பில் பிரதீப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, தவான், புஜாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தவான், 190 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 144 ரன்களுடனும் ரஹானே 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியதும் புஜாரா மேலும் 9 ரன்கள் சேர்த்து 153 ரன்களில் அவுட்டாக, ரகானே 57 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அஸ்வின் 47 ரன்களும் சாஹா 16 ரன்களும் எடுத்து தொடர்ந்து ஆட்டமிழக்க, இந்திய அணி 517 ரன்களை கடந்தது. 
ஒரு மணி நிலவரப்படி, ஹர்திக் பாண்ட்யா 9 ரன்களுடன் ஜடேஜா 15 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பிரதீப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com