“இடுப்பில் மகன்; ஒரு கையில் டென்னிஸ் பேட்”; நெட்டிசன்ஸ் பாராட்டை பெற்ற சானியா..!
ஃபெட் கோப்பைக்கான தொடரில் சானியா மிர்சா பங்கேற்பதற்கு முன்னர் வெளியான புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஷான் என பெயர் வைத்தனர். குழந்தைபேறுக்கு பின் சானியா மிர்சா கடந்த 2 ஆண்
டுகளாக ஓய்வில் இருந்தார்.
இந்த இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கடந்த 8-ஆம் தேதி ஃபெட் கோப்பைக்கான தொடரில் சானியா மிர்சா பங்கேற்றார். ஆட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக சானியா மிர்சா தனது மகன் இஷானுடன் ஆடுகளத்திற்கு வந்தார். அப்போது இடுப்பில் இஷானையும் வலது கையில் டென்னிஸ் பேட்டையும் வைத்திருந்தார்.
இது மட்டுமல்லாமல் இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் “ எனது வாழ்கை இந்தப் புகைப்படத்தில் உள்ளது. எனக்கு வேறு வழியில்லை. இஷான் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி எதை செய்தாலும், என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட வைக்கிறான்.” என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தப் போட்டியில் சானியா மிர்சா இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.